Monday, April 2, 2012

ஆத்மா



கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்

நன்றி வார்ப்பு (கணினி வார இதழ் )

9 comments:

Seeni said...

தாயோட பிரிவை-
அழகா எழுதுடிங்க!

வாழ்த்துக்கள்!

துரைடேனியல் said...

Nallarukku.

துரைடேனியல் said...

நெஞ்சம் கனக்கச் செய்யும் அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்

கனக்கும் மனம்...

அம்பாளடியாள் said...

பிரிவின் துயரை அதன் வலிகளை மிக உணர்ந்து எழுதியிருக்கும் விதம் மனதில் கனமாக இறங்கியுள்ளது இது நிஜம் எனில் ஆழ்ந்த அனுதாபங்கள் சகோ .பகிர்வுக்கு நன்றி .

தொழிற்களம் குழு said...

அருமை சகோ...

இருக்கும் போது பல உறவுகளை நாம் உணர்வதில்லை., பிரிவின் போது அந்த உறவுகள் உணர்த்தும் வலிகள் நம் மனதில் என்றும் நீங்கா வடுவாய் நம் ஆயுள் உள்ளவரை நம் நெஞ்சில் தங்கிவிடுகிறது...

கனத்த வரிகள்...

வாழ்த்துக்கள்...

தினபதிவு said...

மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
தினபதிவு திரட்டி

சீராளன் said...

உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்

ஆன்மாவை தேடும் ஆன்மாக்கள் ..அழகிய கவிதை

சீராளன் said...

உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்

அழகிய கவிதை ..வாழ்த்துக்கள்...