Monday, April 2, 2012

ஆத்மா



கருவறை
சந்திப்பிலிருந்து
இன்றுவரையிலான
கடந்து வந்த
பருவங்களிலும்
நேர் கொண்ட
தருணங்களிலும்
என்னுடன் பயணித்து
உடல் முதுமையால்
களைப்பார
மண் குடில்
சென்று விட்டாய்
உன்பிரிவால்
அடைக்கலம் இன்றி
தனிமையாக்கப்பட்டு
வானுலகம் செல்லுமுன்
உன் இறுதிசடங்கின்
ஒப்பரிக்கிடையில்
சொல்ல மறந்த
நன்றியினை
உன் உறவுகளின்
கண்ணீரில்
பதிவு செய்கிறேன்

நன்றி வார்ப்பு (கணினி வார இதழ் )

Monday, February 13, 2012

முதல் ரயில் பயணம்



தூங்கி எழுந்த 
ஒரு இரவிற்கு பின் 
கண்களில் காட்சிகள் 
மாறியிருந்தது 
சுற்றி பேசுபவர்களின் 
பாஷை செவியடைத்தது 
மரமும் செடிகளும் 
பின்னோக்கி ஓடியது 
ஒரு பேரிரைச்சல் 
இடைவெளியிட்டு 
பயமுறுத்தியது 
சிலர் என்னோக்கி 
செய்கையால் அழைத்தார்கள் 
விசித்திர முகங்கள் 
இருப்பிட அசைவுகள் 
அம்மாவின் மடியிலிருந்தும்
வெம்பி வெம்பி ...
அழுகை வந்தது 

நன்றி :வார்ப்பு (கணினி வார இதழ் )

http://www.vaarppu.com/view/2191/